
அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தில் கடைசி நம்பிக்கை, இன்று அவர் அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சி தாங்க முடியவில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் பற்றி விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கவியரசனாகவும், புவியரசனாகவும் ஒரே நேரந்தில் ஜொலித்த கலைஞர் நலிவுற்றார் என்ற செய்தி கேட்டு இரண்டு நாட்களாக உரக்கம் வரவில்லை. பாராட்டி போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார் என்று ஈரோட்டு பெருகுளத்தில் தந்தை பெரியாரின் தலை மாணக்கராக இருந்து கவிதை எழுதி, நான் யாத்திரை செய்யக்கூடிய திருத்தலம் என் தம்பி கருணாநிதி அடைப்பட்டிருக்கக்கூடிய பாளை சிறைச்சாலை என்று அண்ணா ஆராதித்து மகிழந்த தம்பி, நலிவுற்றார் என்ற செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறேன்.
கால் சட்டை பருவத்தில் என்னை ஆட்கொண்ட தலைவன் அசைவற்று படுத்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தவர் கலைஞர், என்னுடைய திருமணத்தை மாங்கல்யம் எடுத்து தந்து நடத்தி வைத்தவர் கலைஞர், அவரது நிழலில் வளர்ந்தவன் நான். இன்று அவர் அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சி தாங்க முடியவில்லை என கூறினார்.