Published on 16/10/2019 | Edited on 16/10/2019

கடந்த 11 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
அப்போது பிரதமர் மோடியும் சீன அதிபரும் பார்வையிட்ட ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தின் ஒரு பகுதி தற்போது தொடர் மழையால் இடிந்து விழுந்துள்ளது. நூற்றாண்டுகளை கடந்த கோயிலின் இந்த மண்டபம் மோடி ஜின்பிங் சந்திப்பின் போது காவல் கட்டுப்பாட்டு அறையாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.