Skip to main content

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. 
 

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தலை கடந்த 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அறிவித்தது.
 

இதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21- ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, இரு தொகுதிகளுக்கும் கடந்த 23- ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (30/09/2019) மாலை 03.00 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 1- ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது.
 

by election



மேலும் அக்டோபர் 3- ஆம் தேதி மாலை 03.00 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை 05.00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 21- ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர்- 24 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவும்- திமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன.  நாங்குநேரியில் அதிமுக - காங்கிரஸும் மோதுகின்றன. 


நேற்று (28/09/2019) வரை விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 8 பேரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 12 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் இந்த தொகுதிகளில் போட்டியிட ஒரு பெண் கூட வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் புதுவை மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

 

Next Story

30 மாதங்களுக்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Chandrababu Naidu has fulfilled the vow made 30 months ago!

சமீபத்தில் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதே வகையில், மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. 

இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் நேற்று (21-06-24) கூடியது. இந்த கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக புச்சையா சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 4வது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, 30 மாதங்களுக்கு முன்பு போட்ட சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.

Chandrababu Naidu has fulfilled the vow made 30 months ago!

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அப்போது ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரபாபு நாயுடு, “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்த சபையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு  மரியாதை இல்லை. இனிமேல் இந்த சட்டமன்றத்துக்குள் வர மாட்டேன். அப்படி வந்தால், நான் முதல்வராகப் பதவியேற்ற பிறகுதான் மீண்டும் சபைக்கு வருவேன்” என்று சபதமிட்டு அவையை விட்டு வெளியேறினார். அன்று முதல், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா சட்டமன்றத்துக்குள் சந்திரபாபு நாயுடு காலடி எடுத்து வைக்கவில்லை. 

30 மாதங்களுக்கு சட்டமன்றத்துக்குள் வராத சந்திரபாபு நாயுடு, முதல்வராகப் பதவியேற்ற பின் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். இதைத் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஏற்கெனவே சந்திரபாபு சபதம் எடுத்த வீடியோவையும், தற்போது சட்டப்பேரவைக்குள் முதல்வராக நுழையும் வீடியோவையும், இணைத்து தெலுங்கு தேசம் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Vikravandi by election Nomination completed

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தேமுதிகவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (21.06.2024) மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. அதன்படி விக்கரவாண்டி இடைத் தேர்தலில் மொத்தம் திமுக,  பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 64 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.