Skip to main content

நாகை கடற்கரையில் அடுத்தடுத்து ஹெராயின் பவுடருடன் கரை ஒதுங்கிய மரப்பெட்டி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

நாகை கடற்பகுதிகளில் அடுத்தடுத்து ஹெராயின் பொட்டலங்கள் அடுக்கிய மரப்பெட்டிகள் கரை ஒதுங்குவதால் கடல்வழியே தினசரி போதை பொருட்கள் கடத்துவது உண்மையாகியிருக்கிறது.

 

Nagai sea- Heroin Seized - police investigation

 

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள செருதூர் கடற்பகுதியில் கடந்த 24 ம் தேதி மரப்பெட்டி ஒன்று கரை ஒதுங்கியது. அதில் ஹெராயின் பவுடர் அடுக்கியிருப்பதை கண்ட மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பெட்டியை கைப்பற்றிய போலீஸார் அந்த பெட்டியை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெட்டியை நாகப்பட்டினம் அலுவலகத்தில் வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் ஒரு மரப்பெட்டி வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுமார்  மூன்றரை அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும், கொண்ட அந்த மரப்பெட்டியின் உட்புறத்தில் 12 அறைகளிலும் ஹெராயின் எனும் போதை பொருள் அடுக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் கடலோர காவல்படை குழும போலீசார்.

அந்த பெட்டியை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசாரணையை துவங்கியுள்ளனர். இரண்டு முறை பிடிபட்ட ஹெராயின் பொட்டலங்களின் மதிப்பே கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர்.

நாகை, வேதாரண்யம் இடையே ஹெராயினோடு ஒரு வாரத்தில் இரண்டு மரப்பெட்டிகள் கரை ஒதுங்கியுள்ளதும், இரண்டு கண்டைனர் லாரிகள் கஞ்சா, ஹெரானின் லோடுகளோடு பிடிபட்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்