10ம் வகுப்பு தேர்வில் நெல்லை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.84 ஆகும். 42 ஆயிரத்து 676 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.58. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.85. இதில், நெல்லை மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தின் மாணவியான மாதவி என்ற மாணவி 198 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவி தேர்ச்சி பெற்றது குறித்து பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
நெல்லை வள்ளியூர் பகுதியில் இருக்கும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் கமால். இவரது மனைவி வள்ளி. இவர்களின் இரண்டு பிள்ளைகளின் மூத்த மகள்தான் மாதவி. நாடோடிகள் சமூகத்தில் இருந்து ஒரு பெண் பள்ளி சென்று படித்து, பத்தாம் வகுப்பு தேர்வில் 198 மதிப்பெண்கள் பெற்றதால் பலரும் வாழ்த்துக்களும், பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக மாதவி 10ம் வகுப்பு தேர்வு எழுத சென்றபோது அவரை ஊக்குவிக்கும் விதமாக, அவரின் வீடு தேடிச்சென்று வாழ்த்தினார் மாவட்ட ஆட்சியர் சில்பா. அப்போது மாதவியின் ஆசைப்படி, அவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஊரைச்சுற்றிக்காட்டி மகிழ்வித்தார்.