Skip to main content

கட்டிடம் கட்ட அனுமதிக்கு லஞ்சம்... சிக்கிய துணை இயக்குநர்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

வேலூர் மண்டல நகர திட்டமைப்பு துணை இயக்குநராக ஞானமணி என்பவர் பணியாற்றி வருகிறார். நகர கட்டிட வரைப்படங்கள் இவரிடம் வரும்போது அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்குவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் கட்டிட அனுமதி கேட்டு வந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதோடு, சரக்கு போன்றவையும் வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தியதோடு, நான் கேட்கறதை தரலன்னா, இந்த ஜென்மத்தில் நீ அப்ரூவல் வாங்க முடியாது என பேசியுள்ளார்.

 

vellore squad

 

 

இதனால் அதிருப்தியானவர் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தந்துள்ளார். அவர்கள் வகுத்து தந்த திட்டப்படி ராசாயணம் தடவிய 2 லட்ச ரூபாயை புகார் தந்த நபரிடம் தந்து அனுப்பினர்.

அதனை ஞானமணி வாங்காமல் இவருக்கு லஞ்சம் வாங்கி தரும் பணியில் நகர திட்டமைப்பு அலுவலகத்தின் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற ராஜசேகர் என்பவர் பணியில் ஈடுப்படுத்தியுள்ளார். அவர் வாங்கி எண்ணியுள்ளார். அந்த பணத்தை வாங்கி எடுத்துச்சென்று ஞானமணியிடம் தரும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், இருவரையும் பிடித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நகராட்சி நிர்வாக செயலாளருக்கு அறிக்கையை அனுப்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்