தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மோடி அரசைத் தூக்கி எறிய முன்னணியில் நிற்கும், பாஜகவை தோற்கடிக்கும், மதச்சார்பற்ற சக்திகளை அதிகளவில் பாரளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் . 2004 ல் வாஜ்பாயி தோற்கடிக்கப் பட்டார். வாஜ்பாயிக்கு மாற்று யார் எனக் கேட்ட போது இது நடந்தது. அது போல மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள்.
மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் . மிகப் பெரிய பாரதப் போர் போராட்டம் நடைபெறுகிறது. தங்களை கௌரவர்கள் என பாஜக கூறுகிறது. பாஜகவில் மோடி, அமித்ஷா தவிர யார் இருக்கிறார்கள். சனாதன ஆட்சி வீழ்த்தப் படும். சனாதன அவதாரம் அகண்ட பாரதம், அபினவ் பாரத் , பஜ்ரங் தள் என பட்டியல் நீள்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு என அரசியல் சட்டம் வரையறுத்திருக்கிறது.
சனாதன தர்மா அதை சமத்துவத்தை மறுக்கிறது. 2200 கோடி என ஒவ்வொரு நாளும் இந்திய பணக்கார மனிதர்களின் மதிப்பு தினமும் உயருகிறது. விவசாயிகள் மோசமான நிலையை சந்திக்கிறார்கள். மோடி அரசின் பிராண்டு ஜியோ முதலாளி, இந்திய மக்கள் தொகையின் ஐம்பது சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கிறது இது தான் சமத்துவமான பொருளாதாரமா.
இந்தியாவை காக்க மோடி அரசை வீழ்த்துவோம். இந்தியா தலைவர்களை மட்டும் கேட்கவில்லை. தொழிலாளி வர்க்கத்துக்கான ஆதரவான நிலைப்பாட்டையும் கேட்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் நிர்வாணமாக டெல்லியில் வந்தார்கள். அந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. மக்களின் காசை கொள்ளையடித்த மோடி இன்று வாக்குறுதிகளை கொடுக்க காத்திருப்பதாகவும் அவர் பேசினார்.