Fruit shops, country drug stores allowed to open !!

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,62,181 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 19,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 12,60,150 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் கரோனா நிபந்தனைகளுடன் நாட்டு மருந்து கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் முழு ஊரடங்கு காலத்தில் பழக்கடைகள் கரோனா நிபந்தனைகளுடன் இயக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழில் நிறுவனங்கள் பராமரிப்பு பணிகளை ஒரு நாள் மேற்கொள்ள குறைந்த பணியாளர் உடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின்சிக்கல்களைகளைய சென்னை தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் 24 மணி நேர சேவை மையம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment