உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்காக 18வது சீசன் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம் இன்று (24-11-24) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் பங்கேற்க 1,574 பேர் பதிவு செய்த நிலையில் மெகா ஏலத்தில் 574 பேர் தேர்வு செய்யப்படுவர். 574 ஐ.பி.எல் வீரர்களில் 368 இந்தியர்கள் மற்றும் 209 வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள்.
அந்த வகையில், முதல் வீரராக ஏலம் எடுக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங்கின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. இவரை வாங்குவதில் ஐபிஎல் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ரூ.18 கோடிக்கு ஏலம் கேட்ட நிலையில் ஆர்டி மூலம், அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்து பஞ்சாப் அணி அவரை தக்க வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா வீரர் ககிஸோ ரபாடா ரூ.10.75 கோடிக்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.
அதே போல், கொல்கத்தா அணியில் இருந்த ஸ்ரேயஸ் ஐயரை ஏலம் எடுக்க பஞ்சாப், டெல்லி அணிகள் கடும் போட்டி போட்டது. அதில், ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயரை ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் படைத்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்திய வீரரான ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன விரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதுவரை அதிகபட்சமாக விராட் கோலி ரூ.23 கோடிக்கு ஏலம் போன நிலையில் ரிஷப் பந்த் அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.