
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்தவர் அருண்(35). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கார் ஒட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி , 5 வயது மகள் மற்றும் 3 வயது மகன் ஆகியோர் நியூடவுன் பகுதி சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வருகின்றனர். பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளிக்கு கல்வி பயின்ற சென்று வருகின்றனர். கணவர் அருண் வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக பெண் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கதுவை தட்டி உள்ளார். உறவினர் யாராவது வந்திருக்க கூடும் என்று கருதிய அந்த பெண் கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டு வாசற்படியில் நின்றவாறே மர்ம நபர் தன்னுடைய ஆண் உறுப்பு காட்டி பெண்ணை பாலியல் அத்துமீறலுக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெண் உடனடியாக காவல் எண் 100க்கு தொலைப்பேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து தன்னுடைய கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.