புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் தொடக்கவிழா வரும் நவம்பர் 28ந்தேதி நடத்துவது என முதலமைச்சர் அலுவலகம் முடிவு செய்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட தொடக்க நிகழ்வு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், இராணிப்பேட்டை மாவட்ட தொடக்க நிகழ்ச்சி நிகழ்வு 12.30 மணி முதல் 1.30 மணிக்குள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடக்க நிகழ்ச்சியின்போது, சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் –அலுவலகம் உட்பட பெருந்திட்ட வளாகம் மற்றும் உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு வளாகம் அமையும் இடம் போன்றவற்றுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதுப்பற்றி அறிவிக்கப்படும் என அதிகாரிகள் வட்டத்தில் கூறுகின்றனர். இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர்.