Skip to main content

“அறிவியலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - விஞ்ஞானி பேச்சு

Published on 28/02/2025 | Edited on 28/02/2025

 

Scientist speech We need raise awareness about  importance of science

அண்ணாமலைப் பல்கலைக்கழக  சாஸ்திரி அரங்கத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. பதிவாளர் முனைவர் மு. பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில், அறிவியல்  மற்றும் புதுமைகளில் உலகளாவிய  மாற்றத்திற்கு இந்திய இளைஞர்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழக பேராசிரியaர் ஹோட்டி  விஞ்ஞானி பேசுகையில், அறிவியல் தினத்தின் முதன்மையான குறிக்கோள்கள், அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் அறிவியலின் பங்களிப்பு பற்றி மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் கடந்த ஆண்டிற்கான சிறந்த ஆராய்ச்சியாளர் விருது மற்றும் சிறந்த நிதி திரட்டல் ஆராய்ச்சியாளர் விருது பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில்  தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எஸ் குமார், புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் பல்வேறு துறை மாணவ, மாணவியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

சார்ந்த செய்திகள்