
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அருகே உள்ள நெம்மேனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார்(31). இவர் கூலி வேலை பார்த்து வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சரவணக்குமார் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி இரவு சரவணக்குமார் சிறுவனை உழவர் சந்தை பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது போன்று பல முறை சிறுவனுக்கு சரவணக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சிறுவன் இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் பரமக்குடி நகர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்று சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.