Published on 22/11/2021 | Edited on 22/11/2021

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (22/11/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு வட மேற்கு திசையில் இலங்கை, தென் தமிழ்நாட்டை நோக்கி நகரும். புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதியால் வரும் நவம்பர் 25- ஆம் தேதி அன்று முதல் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.