தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை முதல் கனத்த மழை வரை பெய்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மழை நீரால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தினமும் இரவு நேரத்தில் கனமழை பெய்வதும், பகலில் வானம் மேக மூட்டத்துடன் உள்ளது. இரவில் பெய்யும் மழையும், பகலில் திடீர் திடீரென பெய்யும் மழையும் ஏரி, குளங்களை நிரப்பி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த தொகுதி. இங்குள்ள ஏரிகள் வேக வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன. இதுப்பற்றிய தகவல் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவின் முக்கிய தலைவருமான, முன்னால் அமைச்சர் கு.பிச்சாண்டி கவனத்துக்கு கட்சியினர் கொண்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22ந்தேதி கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம் பொற்குணம், கமலபுத்தூர் மற்றும் மதுரா ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக நிரம்பியுள்ள ஏரிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதோடு, அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம், மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள், ஏரிகரை ஓரங்களில் குடியிருப்பவர்களை மழைக்காலம் முடியும் வரை ஊருக்குள் வந்து பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள், அதற்கு வாய்ப்பில்லாதவர்களை இரவு நேரங்களில் கண்டிப்பாக பாதுகாப்பான இடத்தில் வந்து தங்கிக்கொள்ளச்சொல்லுங்கள் என்றுள்ளார்.

அதோடு, கட்சியினரிடம், கிராமங்களில் பாதுகாப்பற்ற வீடுகளில் உள்ளவர்களை பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதிகளவில் மழை பெய்தால் உடனடியாக பள்ளி, சமுதாய கூடங்களில் தஞ்சமடையச்சொல்லுங்கள். ஏதாவது தேவையென்றால் உடனடியாக தகவல் சொல்லுங்கள் அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்கச்சொல்கிறேன். மக்கள் பாதுகாப்பு தான் நமக்கு முக்கியம். அதனால் கட்சி தொண்டர்கள், அதில் கவனமாக இருங்கள் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார் என்கிறார்கள் அவருடன் சென்ற கட்சியினர்.