Skip to main content

கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : ஆயிரம் ஊழியர்களை பணியிடமாற்றும் நடவடிக்கைக்கு இடைக்காலத்தடை!

Published on 06/10/2020 | Edited on 07/10/2020

 

 Kisan scheme  case: Interim ban on government action to relocate 1,000 employees!

 

தமிழகம் முழுவதும் நடந்த கிசான் திட்ட முறைகேட்டினைத் தொடர்ந்து, அத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 1,000 ஊழியர்களைப் பணியிடமாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் வகையில், வருடம்தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த நிதி மேலாண்மையைக் கையாண்டு விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில், வேளாண்துறையின் அட்மா (ATMA -agriculture technic managment agency) திட்டத்தின் கீழ், வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், கிசான் திட்டத்தில், விவசாயிகள் அல்லாத தனிநபர்களும் நிதியைப் பெறும் வகையில் முறைகேடு நடந்திருக்கு தகவல் வெளியானது. இதன் காரணமாக, அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என 30- க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்வதாகவும், பலரைப் பணியிடமாற்றம் செய்தும், தமிழக அரசின் வேளாண் துறையின் இயக்குனர்,  கடந்த செப்டம்பர் 24 -ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கு தொடர்பாக  வேளாண் துறையின் முதன்மைச் செயலாளர், வேளாண்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29 -ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்