Skip to main content

மண்ணெண்ணெய் குடித்த ஒன்றரை வயது குழந்தை பலி!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

kerosene

 

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா காமாட்சிபட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். அவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உண்டு.

 

கடந்த 3 ஆம் தேதி, வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தவறுதலாகக் குடித்த குழந்தை, சிறிது நேரத்திலே மயங்கி விழுந்துள்ளது. 

 

சுகன்யா குழந்தையைத் தூக்கியபோது வாயில் இருந்து மண்ணெண்ணெய் வாடை வந்துள்ளது. உடனடியாக தண்டலை புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனது.

 

முசிறி காவல் நிலைய போலீஸார் கூறுகையில், ''குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தப் பொருள்களையும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் விதத்தில் வைக்கக் கூடாது'' என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 

குழந்தை ஜீவா இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறுதலாக மண்ணெண்ணெய் குடித்து, குழந்தை இறந்துபோன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்