ஈரோடு மாவட்டம் பெருந்துறை போஸ்ட் ஆபீஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான பழைய விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த விருந்தினர் மாளிகை தற்போது செயல்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தனியார் செக்யூரிட்டிகள் நேற்று அங்கு சென்றபோது, பழுதடைந்த கட்டிடத்தின் ஹாலில் நைலான் கயிற்றில் 40-50 வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு அழுகிய நிலையில் உடல் தொங்கிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறைவிட மருத்துவ அலுவலர் தேவி, பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.