கரூர் மாநகர டி.எஸ்.பி கும்மராஜாவை, கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் நீங்க வேட்பாளரா ? டி.எஸ்.பி.யா ? பாலியல் வழக்கில் கிழித்து தொங்க விட்ட சம்பவம் போலிஸ் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பொருளியல் துறைக்குத் தலைவராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன். `52 வயதான இவர் மாணவிகளிடம் தவறாகப் பேசுகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தனர். விசாரிக்க சொல்லி எஸ்.பி. உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தக்கொண்டே வந்தால் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆரம்ப முதலே இந்த வழக்கில் போலிசார் சுணக்கமாகவே இருந்தனர். மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகே அவர் மீது பாலியல்வழக்கு, தீண்டாமை வழக்குகள் பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அப்போதே மாணவர்கள், "காவல்துறை இளங்கோவனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது" என்று குற்றம்சாட்டினர். இருந்தாலும், கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இளங்கோவன் தரப்பில் ஜாமீன் கரூர் நீதிமன்றத்தில் 4 முறை தாக்கல் பண்ணியும் தள்ளுபடி செய்தார் அதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் 4 முறை ஜாமீன் தாக்கல் பண்ணியும் தள்ளுபடி செய்தனர். அதன் பிறகு கரூர் காவல்துறையினர் 90 நாட்கள் கடந்தால் மீண்டும் 9- வது முறையாக ஜாமீன் தாக்கல் செய்தார். விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கும்பராஜா கரூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. என்பதால் இந்த முறை கட்டாயம் தனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று பேராசிரியர் இளங்கோவன் எதிர்பார்த்து இருந்த நிலையில், அந்த ஜாமீன் மனுவைப் பார்த்துக் கோபப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், நேரடியாக அரசு வழக்கறிஞரிடம் என்ன சார் இது.. இதுவரைக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணல என்று கேட்க, உடனே அரசு வழக்கறிஞர் சார்.. வழக்குக்கா தான் ஆஜர் ஆகிறேன் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கும்பராஜா கிட்ட தான் கேக்கணும் என்று மாற்றி விட டென்ஷன் ஆனா நீதிபதி வழக்கின் விசாரணை அதிகாரியான கரூர் நகர டி.எஸ்.பி கும்பராஜாவை ஆஜராகச் சொல்லி 11.45க்கு உத்தரவிட்டார்.
என்னவோ ஏதோ என்று அவசர அவசரமாக ஆஜர் ஆனா கும்பராஜாவை 1 மணிநேரம் காத்திருப்புக்கு பின்பு விசாரணை அழைத்த நீதிபதி நீதிமன்றத்தில் நடந்தவற்றை விவரித்த வழக்கறிர்கள் நம்மிடம் ``நீதிமன்றத்துக்கு கும்மராஜா வந்ததும், குற்றவாளியைக் கைது செய்து 90 நாள்கள் ஆகியும், ஏன் அவர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி தொடர்ந்து, உடனே டி.எஸ்.பி. அரவக்குறிச்சி தேர்தல் நடந்தது என்று சொல்ல உடனே கடுப்பான நீதிபதி நீங்க கட்சி வேட்பாளரா? டி.எஸ்.பி.யா ? என்று கேட்க உடனே அவசரஅவசரமாக கும்பராஜா சார் நான் டி.எஸ்.பி. என்று சொல்ல உடனே இடம் மறிந்த நீதிபதி நா என்ன கேக்கறேன் நீங்க என்ன சொல்றீங்க, இவ்வளவு நாளா ? ஏன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் என்று கேட்டால் நீ என்ன பதில் சொல்றீங்க குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அவருக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடும் அதற்கு நீங்களே வழிவகுக்கிறீர்களா? அப்போ நான் உங்கள் விசாரணையில் சந்தேகம் இருக்கிறது. நீங்கள் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று எழுதி வைத்து ஜாமீன் கொடுத்தால் உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய் விடும்.
உங்களை எல்லாம் யார் போலீஸ் வேலைக்கு எடுத்தது? நீங்களெல்லாம் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்? நீங்கள் குற்றவாளியை தப்பிக்க வைக்கக் காரணமாக இருந்திருக்கிறீர்கள்? உங்களை மாதிரி ஆள்கள் காவல்துறையில் இருந்தால் பொதுமக்களுக்குத்தான் கேடு. கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் என்ன கஷ்டம்? இப்படிப்பட்ட வழக்கில் இவ்வளவு அலட்சியமாக 90 நாள்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் பண்ணாம, அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க? எனக்குக் காரணம் சொல்லணும். இளங்கோவனுக்கு இன்று ஜாமீன் தரமுடியாது. நீங்க 90 நாள்களும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு தினவாரியான அபிடவிட்டை கோர்ட்டில் தாக்கல் பண்ணுங்க. திங்கட்கிழமை தாக்கல் பண்ணணும். அன்னைக்கு இந்த மனுமீதான விசாரணையைத் தள்ளி வைக்கிறேன்' எனக்கும் பெண் பிள்ளைங்க இருக்காங்க, அதான் இவ்வளவு ஆதங்கப்படுகிறேன். போய் வேலைய பாருங்க என்று கடுப்படுத்து அனுப்பினார்.
இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெகதீஷன், புகழேந்தி, முருகானந்தம், தமிழ்ராஜேந்திரன் ஆகியோர் ஆஜர் வழக்காடி வருகிறார்கள். இந்த வழக்கு குறித்து அவர்களிடம் நாம் பேசுகையில் பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவிக்கே நீண்டநாட்கள் கழித்து தான் கிடைத்தது. இந்த வழக்கில் மாணவிகளிடம் தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதை விசாரிக்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறார். சிறையில் வைத்தே வழக்கு விசாரணையை நடத்தலாம் என்று தொடர்ச்சியாக நாங்க வழியுறுத்தி வருகிறோம் என்றார்.