Skip to main content

எஸ்.வி.சேகர் விவகாரத்தில் பாஜக சொல்வதை ஏற்க முடியாது: கனிமொழி எம்.பி.

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
kanimozhi 600.jpg


பத்திரிக்கையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்து என்று பாஜக கூறுவதை ஏற்க முடிடியாது என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். 
 

பத்திரிக்கையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, 
 

எஸ்.வி.சேகர் கருத்துக்கு எனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளேன். கவர்னர் செய்த ஒரு செயலுக்காகத்தான் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்படி இருக்கும் சூழ்நிலையில் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 

அது அவருடைய சொந்த கருத்து. அதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜனதா சொல்வதை ஏற்க முடியாது. இது தவறு என்று நினைத்தால் பாரதீய ஜனதா கட்சி நிச்சயமாக அவர்(எஸ்.வி.சேகர்) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்