சென்னையில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது.
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், அயப்பாக்கம், அனகாபுத்தூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரத்திலும் பரவலாக கனமழை பொழிந்து வருகிறது. ஆதனூர், சேவூர், இராட்டினமங்கலம், மலையம்பட்டு, களம்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இரவு 10:00 மணி வரை 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.