Published on 26/05/2020 | Edited on 26/05/2020
![kanyakumari district dams opening cm announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/fxGb4nakEo9SOtVZgrvyKEdwMvj6wevS9eQSB5QdoEI/1590488591/sites/default/files/inline-images/cm32455_0.jpg)
ஜூன் 8- ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1, 2 அணைகளில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு 08-06-2020 முதல் 28-02-2021 வரை நாள் ஒன்றுக்கு, வினாடிக்கு 850 கன அடி வீதத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.