Skip to main content

‘மக்களுடன் முதல்வர்’ - கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்கள்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Ministers who have received petitions under the Chief Minister with People scheme

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சி மண்டலம்-1 ஸ்ரீரங்கம் தேவி அரங்கம், எஸ். கண்ணனூா் பேரூராட்சியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம், லால்குடி ஊராட்சி ஒன்றியம் தாளக்குடி ஏ.பி.எஸ். மஹால் ஆகிய இடங்களில் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதே போல், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மணப்பாறை  நகராட்சிக்குள்பட்ட பொத்தமேட்டுப்பட்டி மாதா மக்கள் மன்றத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் 19 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 22 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 13 இடங்களிலும், ஊரகப் பகுதிகளில் 26 இடங்களிலும் என மொத்தம் 80 இடங்களில் நேற்று முதல் வரும் 2024 ஜனவரி 5 -ஆம் தேதி வரையிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை பெற்றுத் தீா்வு காண்பதற்கு தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  முகாம்களில் பெறப்படும் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார். எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சி. கதிரவன், பி.அப்துல் சமது, மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன், நகர பொறியாளா் சிவபாதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.