![Female S.P. Complaint can be heard in eight weeks .. - CBCID](http://image.nakkheeran.in/cdn/farfuture/69gguMJiSwL8mjBPwd49FNs9mj9AjaJk2zPtMAArkSk/1616495120/sites/default/files/inline-images/th_722.jpg)
காவல்துறை உயரதிகாரி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை எட்டு வாரத்திற்குள் முடியுமென சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்துவருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, கூடுதல் டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது இந்த விசாரணையை முடிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமென நீதிபதி கேள்வி எழுப்பிய போது, இன்னும் எட்டு வாரத்தில் விசாரணை முடிக்கப்படுமென்றும் இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு டி.ஐ.ஜியின் செல்ஃபோன் கைபற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சி.சி.டி.வி. காட்சிகளும் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நீதிபதி, வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒதுக்கி வைத்து உத்தரவிட்டுள்ளார்.