Skip to main content

“திராவிட மாடல் காலாவதியானது..” - ஆளுநர் ரவி பேச்சால் சர்ச்சை

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

“Dravidian model is outdated..” - Governor Ravi Bechal Controversy

 

தனியார் ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ரவி நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 

 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் மாளிகை செலவுகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக்கழக சட்ட மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முதல் முறை அவர்கள் அனுப்பிய சட்ட மசோதாவில் திருத்தங்களை செய்து தரச் சொல்லி அனுப்பினேன். ஆனால், மீண்டும் அதே சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள். அதனால், அந்த சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

 

அந்த சட்ட மசோதாவில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் படி ஆளுநர் தான் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டும். அதனால் அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலை. சென்னை பல்கலை. உள்ளிட்ட எட்டு உயர் கல்வி நிறுவனங்களின் சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் அதில், துணைவேந்தர்களை நியமிப்பதை மாநில அரசு எடுத்துக்கொள்கிறது. ஆளுநர் துணைவேந்தர்களை நியமித்தால் தான் அதில் அரசியல் இருக்காது. அதனால், அவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். அவரும் என் மீது மரியாதை வைத்திருக்கிறார். இருவரும் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம்.”

 

 

சார்ந்த செய்திகள்