பழனி முருகன் கோயிலில் செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை ஒரு நாள் நிறுத்தம் செய்வது குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியை ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை வரும் 30 ஆம் தேதி (30.05.2024) ஒரு நாள் மட்டும் இயங்காது எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.