Skip to main content

'அதைப் பற்றியே பேசக்கூடாது...' - அமைச்சர் செங்கோட்டையன்!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

 'Don't talk about it ...' - Minister Senkottayan!

 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மாநில அ.தி.மு.க. வர்த்தக அணிச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சில பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

 

"பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வுசெய்து முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அரசுப் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அதற்காகவே பெற்றோர்கள் விரும்பி அரசுப் பள்ளியில் சேர்க்கின்றனர். இதை ஊக்கப்படுத்த தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் 405 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்புத் தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வுசெய்து முடிவு செய்துள்ளது. பாடநூல் திட்டம் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வருகிறோம். அரசுப் பள்ளியில் உள்ள மீதமுள்ள புத்தகங்களைத் திரும்ப அனுப்பி வருகின்றனர். அவற்றை கரூரில் உள்ள டி.என்.பி.எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம். அவற்றை பெற்றோர் ஆசிரியர் சங்கம், எந்தப் பள்ளிகள் வேண்டுமானாலும் வாங்கலாம்" என்றவரிடம், சமீபத்தில் பழைய இரும்பு கடையில் பிடிபட்ட தமிழக அரசு புத்தகங்கள் பற்றி கேட்டபோது  "ஒருவர் 2 ஆயிரம் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து இருந்தார் என்பதற்காக அதைப் பற்றியே பேசக்கூடாது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்