
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் குடும்பத்துடன் அருகேயுள்ள கன்னிகோவிலுக்கு குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கே பொங்கல் வைத்து சாம்பிராணி ஊதுபத்தி வைத்து குலதெய்வ வழிபாடு செய்தபோது அருகே இருந்த மரத்தில் இருந்து தேனீக்கள் கிளம்பின. அங்கிருந்த உறவினர்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து தேனீ கொட்டியதால் படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில் செந்தில்குமார் என்பவர் உயிரிழந்தார் மேலும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குலதெய்வ வழிபாடுக்குச் சென்ற இடத்தில் தேனீக்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழந்து பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.