Skip to main content

தொடங்கியது திமுக சார்பிலான அனைத்துக்கட்சி கூட்டம்!

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் பத்தாம் தேதி  நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க பத்தாம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டியிருந்தது.
 

 DMK-oriented all-party meeting started

 

ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக,  ஐஜெகே, மதிமுக ஆகிய கட்சிகள்  பங்குபெற்றுள்ளன.

கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவிபச்சமுத்து, முத்தரசன், திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்