தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து நிலானியும், காந்தியும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான நிலானியிடம் விசாரணை நடத்த வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர் போலீசார். அங்கு அவரது மகனும், மகளும் இருந்துள்ளனர். நிலானியை காணவில்லை என்றதும், அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
36 வயதாகும் நிலானி நிலா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமான இவர் தனது கணவரை விவாகரத்து செய்தவர். நிலானி நிலாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வளசரவாக்கத்தில் குடியிருந்து வரும் நிலானி சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார்.