தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 3,592 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 4456 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 663 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 721 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,862 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை 66,992 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 14,182 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 33,23,214 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று மட்டும் 1,10,898 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.