கத்தியைக் காட்டி செல்போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து வந்த இளைஞர் ஒருவர் அதே கத்தியை தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு ஆபத்தான இடங்களில் செருகி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இருப்பது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற இளைஞர் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. வழிப்பறியில் ஈடுபட்ட நரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வழிபறிக்கு பயன்படுத்திய கத்தியை வைத்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடி அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டால் ரிலீஸ் ஆக வெளியிட்டுள்ளார். கத்தியை ஆபத்தான முறையில் கால் சட்டையில் செருகியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் வழிப்பறி தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புதுப்பட்டு கிராமத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற நரேஷ் கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக மாவு கட்டு போடப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நரேஷ் சிறையில் அடைக்கப்பட்டான்.