பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பாலாவில் 25ஆம் ஆண்டு திரைப்பயணம் மற்றும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் சேர்ந்து சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ்குமார், மாரி செல்வராஜ், மிஷ்னின், நித்திலன் சாமிநாதன், நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியின்போது அருண் விஜய் பேசுகையில், “வணங்கான் என் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். பாலா சார் உண்மையில் மிகவும் ஜாலியான அன்பான மனிதர். இந்த வாய்ப்பு கிடைத்தவுடன் சூர்யாவை அழைத்தேன். எனக்கு இந்த படம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த முதல் நபர் அவர்தான். அவரின் கிரீன் சிக்னலுக்கு நன்றி” என்றார். வணங்கான் படத்தில் முதலில் சூர்யா மற்றும் க்ரீத்தி ஷெட்டி நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.