Skip to main content

கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி வராததால் மாவட்ட அதிகாரிகளிடம் புகார்!

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
officer


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் அலுவலர் வராமல் போனது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அறந்தாங்கி துணை பதிவாளர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன் மனு கொடுத்தார். கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த 9ந் தேதி 36 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கோர்ட் உத்தரவுப்படி 23ந்தேதி மனுபரிசீலனையும் 24ந்தேதி இறுதி பட்டியல் வெளியிடவும் வரும் 27 ந்தேதி தேர்தல் நடத்தவும் கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக தேர்தல் நடத்தும் அலுவலர் வங்கிக்கு வராததால் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கூட்டுறவு சங்கத்தை பூட்டியும் பொங்கல் வைத்து படையலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோர்ட் உத்தரவிட்ட பிறகும் தேர்தல் நடத்தும் அதிகாரி வராமல் போனதால் இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை இ.கம்யூ முன்னாள் மாவட்டசெயலாளர் செங்கோடன் துணை பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இது குறித்து விசாரிப்பதாக தெரிவித்தனர். அப்போது இ.கம்யூ மாவட்ட குழு ராசேந்திரன், மதிமுக முன்னாள் கவுன்சிலர் செல்வம், திமுக ஒன்றிய பிரதிநிதி தங்கராஜ், திமுக கிளை செயலாளர் தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்