Published on 02/05/2020 | Edited on 02/05/2020

தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒருவர் இறந்ததால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 29 ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனா உறுதியான 231 பேரில், 174 பேர் சென்னையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 13 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 158 பேரும், பெண்கள் 72 பேரும் திருநங்கை ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,341 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,30,132 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 100க்கும் மேல் இருந்தது. அதேபோல் இன்றும் 174 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தொடர்ந்து சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.