தமிழக அரசியல் களம் வருகிற 2021 சட்டபேரவை தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணிக்குள் உறுதி தன்மையும் சில குழப்ப குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கினைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசியம்மாள் சில நாட்களுக்கு முன்னாள் காலமானார். தாயரின் இறுதி சடங்கு துக்க நிகழ்வுகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கிராமமான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் தோட்டத்து வீட்டில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு பல கட்சி தலைவர்கள், நிர்வாகிகளும் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்து வருகிறார்கள். இந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் கட்டுப்பாட்டு குழு தலைவரான வி.பி. குணசேகரன் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து துக்கம் விசாரித்தார். அப்போது வி.பி.குணசேகரனிடம் எடப்பாடி பழனிசாமி "குணா எப்படியிருக்கே?" என முதல்வர் எடப்பாடி கேட்க அதற்கு வி.பி. குணசேகரன் " நலமா இருக்கேன் நீங்கதான் முதல்வர் ஆகீட்டீங்க மகிழ்ச்சி" என கூறியிருக்கிறார். அருகே இருந்தவர்களுக்கு சிறிது நேரம் புரியவில்லை. ஆம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வி.பி. குணசேகரனும் ஒன்றாக பவானியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்றாக 10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், பள்ளி தோழர்கள்...