Skip to main content

கார் மோதியதில் 66 செம்மறி ஆடுகள் உள்பட ஒருவர் பலி

Published on 24/05/2020 | Edited on 24/05/2020

 

கார் மோதியதில் 66 ஆடுகள் உள்பட ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காமராஜ் (வயது 54), கலியமூர்த்தி (வயது 63), ஆயுதகளத்தை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (வயது 37), பெரிய வளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 55) மற்றும் கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45) ஆகியோர் செம்மறி ஆடுகள் வைத்து மேய்த்து வருகின்றனர்.

 

 

நேற்று முன்தினம் மாலை கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடு அருகில் மேய்த்து கொண்டு இருந்தனர். பின்னர் தங்களது கிராமம் தேவமங்களத்திற்கு நடை பயணமாக 180 செம்மறியாடுகளை ஓட்டி கொண்டு வந்து கொண்டு இருந்தனர். இரவு 1 மணியளவில் மீன்சுருட்டி அருகே வெண்ணங்குழி ஓடை, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று காமராஜ் மற்றும் சந்திரசேகர் 66 செம்மறியாடுகளையும் மோதியதில், காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 66 செம்மறியாடுகள் இறந்து போனது. இவர்களுடைய வாழ்வாதாரமே செம்மறியாடுகள் தான் என்று கூறி அழுதனர்.
 

இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 
 

விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் விழுப்புரம் மாவட்டம், அய்யனாத்தூர், ஆர்க்காடு மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜா ( வயது25) என தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

 


 
 

சார்ந்த செய்திகள்