Skip to main content

திட்டக்குடி: கால்நடைகள் மர்ம மரணம் - சோகத்தில் விவசாயிகள்...

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
image

 

 

திட்டக்குடி அருகே மர்மமான முறையில் கால்நடைகள் உயிரிழப்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

சமீப நாட்களாக தற்போது தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது இதனால் மானாவாரி விவசாய நிலங்களைச் சுத்தப்படுத்தி விதைப்பதற்கு தயாராகி வருகின்றனர். இதற்காக ஏர் உழுவதற்காக மாடுகளை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள ஐவநூர், கொரக்கை, தி.ஏந்தல், வெங்கனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பதினைந்துக்கும் மேற்பட்ட  மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட  கால்நடைகள்  மர்மமான முறையில் இறந்துள்ளன.

 

இந்த சம்பவம் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் புதர் போன்று செடி கொடிகள் வளர்ந்துள்ளதை அழிப்பதற்காக களைக்கொல்லி மருந்து தெளித்துள்ளனர் என்றும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் களைக்கொல்லி மருந்து தெளித்த புற்களை சாப்பிட்டு அதனால் இறந்திருக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் மக்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்