Skip to main content

ஜனநாயக ரீதியாக போராடக் கூடாதா? - முத்தரசன் காட்டம்!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

ஜனநாயக ரீதியாக போராடக் கூடாதா? அரசு  கைது செய்கிறதே! என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது. நிலையை அறிந்து ஆய்வை குறை கூறாமல் பொறுப்புகளை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அன்று இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்து செயல்படுத்தினார். இன்றோ மத்திய அரசு அறிவிக்காமலே அவசர நிலை பிரகடனத்தை செயல்படுத்தி வருகிறது.

ஸ்விஸ் வங்கியில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பணம் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல் வருகிறது. ஜனநாயக ரீதியில் போராடக் கூடாதா? அரசு  கைது செய்கிறதே!  தமிழக அரசின் மோசமான செயல்பாடுகளைக் கண்டித்து ஜூலை 5ம் தேதி சென்னை திருவள்ளுர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.
 

Can not fight democratically?


மக்களின் நேரடி தொடர்பில் உள்ள  உள்ளாட்சித் தேர்தலை காரணமின்றி ஒத்தி வைக்கும் நடவடிக்கையை கைவிட்டு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்டப்பகலில் கத்திக்குத்து; ரத்த வெள்ளத்தில் அலறிய பெண் காவலர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
stabbing in broad daylight; The female guard screamed in blood

காஞ்சிபுரத்தில் சீருடையிலிருந்த பெண் காவலரை, அவரின் கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக இன்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர்  வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையிலிருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் கணவன் மனைவியைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

'திமுக வெற்றிக்காக பாடுபடுவோம்' -முத்தரசன் பேட்டி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
nn

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். திமுக வெற்றிக்காக பாடுபடுவோம். வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்'' என்றார்.