Published on 02/08/2019 | Edited on 02/08/2019
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, தான் அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
![j. deeba](http://image.nakkheeran.in/cdn/farfuture/UvraxP9xzaUQ7CGWq7XQ8QPIQquY3BxyWszKWD9pOVk/1564738651/sites/default/files/inline-images/j.%20deeba%2055.jpg)
லண்டன் செல்லும் அளவுக்கு ஜெ.தீபாவின் பொருளாதார பின்னணி என்ன என்று விசாரித்தபோது, நடராஜன் இருக்கும்போதே ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு சில உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. பேரவை மற்றும் கட்சி தொடங்கிய பிறகு உறுப்பினர்கள் சிலரிடம் பண வசூல் செய்ததாகவும், அந்த பணத்தை ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தனது தொழிலுக்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் தீபா, பின்னர் அங்கேயே குடியேற உள்ளார் என்றும், சசிகலாவின் சம்மதத்தோடுதான் லண்டன் செல்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.