Skip to main content

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனை; லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கா நல்லூர் கிராமம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தன்னுடைய தாயார் கண்ணம்மாள் பெயரில் சொத்து மதிப்பு சான்று பெற்று அரசு ஒப்பந்த டெண்டர்களை எடுத்து செய்து வருகிறார்.

இவர் சொத்து மதிப்பு சான்று பெற ரூபாய் 20 லட்சத்திற்கு அரசிற்கு செலுத்த வேண்டிய 7900 ரூபாய் வங்கியின் மூலமாய் காசோலை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரின் பரிந்துரை பெற்று கடந்த 13.6.2024 ஆம் தேதி ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா அணுகி தந்துள்ளார்.

அவர் ரூ.20 லட்சம் சொத்து மதிப்பீடு சான்று பெற இரண்டு சதவிதம் ரூ,20,000 லஞ்சமாக கேட்டு உள்ளார். பின்னர் அவரிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சொல்லவே குறைந்தது ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் சான்று வழங்க முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டார். அவர் மிக மோசமாக பேசியதால் மனம் உடைந்த சீனிவாசன் வேறு வழி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திருவேல் முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர். கோபிநாத் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் ஜூன் 14ஆம் தேதி மாலை ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் சென்று அணுகிய போது கொண்டு வந்த லஞ்சப் பணத்தை இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்க சொல்ல ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜிலன்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் மைதிலி கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் மஞ்சுளா லஞ்சம் வாங்கச்சொன்னது உண்மை எனத் தெரியவந்து தாசில்தாரும், இரவு காவலரும் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்நாளே பள்ளி வேனில் தீ; உயிர் தப்பிய மாணவர்கள்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
School van fire on first day; Students who survived

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பபட்டுள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான இன்று திருவண்ணாமலையில் தனியார் பள்ளி வேனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்கள் உடனடியாக வேனிலிருந்து இறக்கி விடப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

ரூ.50 ஆயிரம் லஞ்சம்; கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருவர் கைது

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Two persons arrested for taking bribe in Cuddalore Corporation office

கடலூர் மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளர் மற்றும் பில் கலெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் பெண்ணையாற்று சாலையில் வசிக்கும் செல்வம் என்பவர், தனது சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக மாநகராட்சி பில் கலெக்டர் லட்சுமணனை அணுகியுள்ளார். அவர், ‘வருவாய் ஆய்வாளரைச் சந்தியுங்கள்’ எனக் கூறியதைத் தொடர்ந்து, செல்வம், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரைச் சந்தித்து பேசியபோது, சொத்து வரியை அளவீடு செய்து நிர்ணயம் செய்ய, ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி தேவநாதன் ஆலோசனையின் பேரில், செல்வம் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று லட்சுமணன் மூலம் பாஸ்கரை சந்தித்து, ரூ.50 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொண்டார். இதில், முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் வழங்குவதாகக் கூறி, அதை அவர்களிடம் அளித்துள்ளார்.

இதை அங்கிருந்து கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் பில் கலெக்டர் லட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.