Skip to main content

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் விதிகளை மீறி பேனர்;ட்ராபிக் ராமசாமி முறையீடு:அவரச வழக்காக விசாரிக்க நீதிபதி பரிந்துரை!

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

 

Beyond the rules

 

நாளை நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக சென்னை முழுவதும் விதிகளை மீறி பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ள நிலையில் இதனை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் சென்னை முழுவதும் விதிகளை மீறி பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டு இதனை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை இன்றே அவரச வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மணிகுமார் அமர்வுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

சார்ந்த செய்திகள்