Published on 03/09/2021 | Edited on 04/09/2021

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய "மரப்பாச்சி சொன்ன ரகசியம்" என்ற நூலுக்கு 2020ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் அவருக்கு 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது அறிவிப்பால் அவருக்கு பல்வேறு முக்கியமான அறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களின் வழியாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். துலக்கம், அன்பான பெற்றோரே, சந்துருக்கு என்னாச்சு, புதையல் டைரி, பூமிக்கு அடியில் ஒரு மர்மம் முதலிய நூல்களை யெஸ். பலபாரதி எழுதியுள்ளார்.