திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 52 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்க இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆட்சி மன்ற குழு கூட்டம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக சார்பில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் இருந்து ரூபாய் 13 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதுதேர்தல் செலவுக்கு போதுமானதா? தேர்தல் செலவு எவ்வளவு ஆகும். தேர்தல் பொறுப்பாளர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி விவாதிக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென அந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் யார்? என தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப முழுமையான விவாதத்தை நடத்துவதற்கு வசதியகாக ஆட்சி மன்ற குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.