Published on 16/05/2018 | Edited on 16/05/2018

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் மறைவையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
’’கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு படைப்புகளை உருவாக்கி, சிறந்த எழுத்தாளராக விளங்கிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பாலகுமாரன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். தமிழக அரசின் திரு.வி.க. விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மறைவு இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு ஆகும். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’