Skip to main content

மூதாட்டி கொடூர கொலையில் சிக்கிய 5 பேர்; 30 பவுன் நகை மீட்பு!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

5 people involved in  jewelry recovery!


கோவையில் வைசியாள் வீதி அடுத்த கெம்பட்டடி காலனியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (62). கடந்த 30ஆம் தேதி இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாகக் குத்தி படுகொலை செய்யபட்டார். இவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. 

 

இந்த நிலையில் இவர் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார், நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

 

5 people involved in  jewelry recovery!


இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 சவரன் தங்க நகைகள், ஆட்டோ, கார், டூவிலர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திலக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கொலை குறித்து போலீசார், கெம்பட்டி காலணி நான்காவது வீதியைச் சேர்ந்த ரவி என்பவரது மனைவி லதா (எ) ராணி மளிகைச் சாமான்கள் வாங்க அடிக்கடி சென்று வரும்போது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

 

மேலும் தனலட்சுமி தனியாக இருக்கும்போது லதா சிறு சிறு உதவிகள் செய்து வந்துள்ளார். நாளடைவில் பழக்கம் அதிகரிக்க தனலட்சுமியிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பது லதாவிற்கு தெரிய வந்தபோது, லதா தன் தம்பி திலக்கிடம் தனலட்சுமி நிறைய பணம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

 

5 people involved in  jewelry recovery!


பட்டறை ஒன்றில் பணியாற்றி வரும் திலக், கடன் தொல்லையில் இருந்தது வந்துள்ளார். இந்நிலையில், திலக் தனது சகோதிரிகளான மாலா, லதா மற்றும் நண்பர்களான பீளமேடு பகுதியில் வசித்து வரும் செல்வம், மனோஜ்குமார், சத்தியசீலன் ஆகியோரை இணைத்துக்கொண்டு தனலட்சுமியின் வீட்டில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியுள்ளார்.
 

இதன்படி திலக் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒருமாதமாக தனலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளார். சம்பவ நாளன்று இரவு 9 மணியளவில் திலக் தனது நண்பரான செல்வத்துடன் தனலட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளார். திலக், லதாவின் சகோதரர் என்பதால் இருவரையும் வீட்டினுள் தனலட்சுமி அனுமதித்து உள்ளார். 

 

5 people involved in  jewelry recovery!


அப்போது தங்களது திட்டம்படி விஷம் கலந்த இனிப்பை தனலட்சுமிக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். இதனைச் சாப்பிட்ட தனலட்சுமிக்கு சில நிமிடங்களில் தலை சுற்றல் ஏற்பட்டு உள்ளது. இனிப்பில் ஏதோ கலந்து தனக்கு கொடுக்கபட்டிருப்பதாக சந்தேகமடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். 

 

Ad

 

இதனால் பதற்றம் அடைந்த இருவரும் தனலட்சுமியின் தலையில் சரமாரியாக தாக்கியதில் தனலட்சுமி உயிரிழந்துவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த 70 சவரன் நகையைக் கொள்ளையடித்து இருவரும் தப்பிவிட்டனர். தனலட்சுமியிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் உள்ளதாக லதா கூறியதின் பேரில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

5 people involved in  jewelry recovery!

 

ஆனால் எதிர்பார்த்த பணம் இல்லாததால் கிடைத்ததை கொள்ளையடித்து ஐந்து பங்குகளாக பிரித்து  உள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் லதா குடும்பத்தினர் நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி; லால்குடியில் பரபரப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A rowdy who was shooted; There is excitement in Lalgudi

பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள ஆதிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா. அந்தப் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த கலைப்புலி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்தப் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்தார். கலைப்புலி ராஜா போலவே நவீன்குமார் என்பவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.

கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகிய இருவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியால் அடிக்கடி மோதல் எழுதுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவைத் தேடி வந்தனர்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சிறுகனூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கலைபுலி ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்பொழுது பதிலுக்கு ரவுடி கலைப்புலி ராஜா போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் தற்காத்துக் கொள்வதற்காக காலில் சுட்டதில் பலத்த காயமடைந்த ராஜா கீழே விழுந்தார். உடனே அவரைப் பிடித்த போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

11 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டையில் கொடூரம்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
11-year-old girl confined at home; Atrocity in pattukottai

தஞ்சாவூரில்  11 வயது சிறுமி  வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாரதி, மதியழகன் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்தும் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சரளா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.