
கரூர் அருகே கரு மேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கு முன்பு ஆண் மயில் தோகை விரித்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த எல்லமேடு பகுதியில் விவசாய தோட்டம் ஒன்றின் மோட்டார் அறையின் மேல் ஆண் மயில் ஒன்று அமர்ந்திருந்தது. அப்போது மழை வருவதற்கு முன்பாக கரு மேகங்கள் சூழ்ந்து வானம் ரம்மியமாக காட்சியளித்தது. அந்த நேரம் ஆண் மயில் அழகான தனது தோகை முழுவதையும் விரித்து, நடனமாடிய காட்சி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.