Skip to main content

11 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டையில் கொடூரம்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
11-year-old girl confined at home; Atrocity in pattukottai

தஞ்சாவூரில்  11 வயது சிறுமி  வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாரதி, மதியழகன் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்தும் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சரளா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 

Next Story

அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Tragedy of the young man who set himself on fire in front of the authorities in gummidipoondi

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் கல்யாணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீடு பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருவாய் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தாமல் நேற்று முன்தினம் (4 ஆம், தேதி) காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்று வீட்டை இடிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் செல்வந்தர் ஒருவர் தனது குடும்பத்திற்கு தானமாக கொடுத்த தனிநபர் பட்டா நிலத்தில் தாங்கள் வசிப்பதாக கூறியதை ஏற்க மறுத்த அதிகாரிகள் உரிய கால அவகாசம் வழங்காமல் வீட்டை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

அப்போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்த தீ அணைப்பான் கருவி மூலம் அவரது உடலில் பற்றிய தீயை அனைத்து, 60% காயங்களுடன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், இந்த விவகாரத்தில் பணியின் போது கவன குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, ஏளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்விழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர், இந்த நிலையில் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.