பேரூராட்சியாக இருந்த திட்டக்குடி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் வெற்றி பெறும் கவுன்சிலர்களில் ஒருவர் சேர்மனாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
பேரூராட்சியாக இருந்த போது, கடந்த 2016 தேர்தலில் பேரூராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த நீதிமன்னன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்தார். இவர், தற்போது நடைபெற உள்ள தேர்தலில் 12வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதேசமயம், இவரது மனைவி கலை செண்பகம் 4வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதிமுக தரப்பினர் கலை செண்பகத்தை போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் போட்டியிட்டே தீருவேன் என்று தீவிரமாக தேர்தல் பிரச்சார பணியில் உள்ளார். கணவர் அதிமுக சார்பிலும், மனைவி சுயேட்சையாகவும் போட்டியிடுவது திட்டக்குடி நகர மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.