மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறித்து சட்டமன்ர உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பதில் அளித்தார்.
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மகளிர் சுய உதவிக்குழுக்கள் நேரடி வங்கிக் கடன் பெற குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை 6 மாதம் தவறாது கூட்டங்களை நடத்தி சேமிப்பு செய்து, உள்கடன்களை வழங்கி, குறித்த காலத்தில் உள்கடனை திரும்ப செலுத்தி கணக்குப் புத்தகங்கள் முறைப்படி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
அவ்வாறு செயல்பாட்டில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சுய உதவிக்கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. பெறப்பட்ட சுய உதவி விண்ணப்ப கடிதங்கள் அனைத்தும் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையின் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி 21 நாட்களில் சுய உதவிக்குழுவினரின் வங்கிக் கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது.
21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.